பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது - மழைராஜ்

சனி, 1 அக்டோபர் 2011 (17:35 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி அக்டோபர் 4ஆம் தேதி வரை தமிழத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும் வாய்ப்புள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியின் தெற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் தற்போது பரவலாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பெய்துவரும் மழை தீவிரமடையும் வாய்ப்புள்ளது.

அக்டோபர் 4ஆம் தேதி வரை கடலூர், புதுச்சேரி, சென்னை உட்பட வட தமிழகத்திலும், புதுக்கோட்டை, காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தென் தமிழகத்தின் சில இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவ மழை துவங்கும் போது ஜூன் மாதத்திலேயே வங்கக் கடல் பகுதியில் ஒரிஸா மற்றும் மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத மழை பெய்யும் எனத் தெரிவித்திருந்தேன். அதேபோல் தற்போது தொடர்ந்து ஓரிஸாவில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையிலும் வரலாறு காணாத மழை பெய்யும் எனத் தெரிவித்திருந்தேன்.

அதேபோல் இந்த வருடம் சென்னையிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் செப்டம்பர் 14 முதல் 19 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ள தேதி என தெரிவித்திருந்தேன். சென்னையில் 16 முதல் 19 ஆம் தேதி வரை பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மழை தேதி கணிப்பின்படி அக்டோபர் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நிலநடுக்க தேதி கணிப்பின்படி அக்டோபர் 3 பலத்த மழை நிலநடுகூகம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும். 3 நாள் வித்தியாசத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்