ஜூன் 11ம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் பரங்கிபேட்டையை மையமாக கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.
இதனால் ஜூன் 13ம் தேதி முதல் கடலூர், புதுச்சேரி, சென்னை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, விழுப்புரம், சேலம், தர்மபுரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 13 முதல் 17ம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கேரளா, தெற்கு கர்நாடாகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை மற்றும் நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி ஜூன் 12, 17 ஆம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.