கபினி அணையில் இருந்து 22,500 கன அடி நீர் வெளியேற்றம்
செவ்வாய், 19 ஜூலை 2011 (20:36 IST)
தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவிலும், கேரளத்திலும் தொடர்ந்து மழை பெய்த்ததால் கபினி அணைக்கு நீர் வரத்து கடுமையாக அதிகரித்தையடுத்து, அந்த அணையில் இருந்து 22,500 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது.
இதனால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளை அருவிக்கு அருகே அழைத்துச் செல்லும் பரிசல் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கலுக்கு இன்று காலை நிலவரப்படி நொடிக்கு 30 ஆயிரம் கன அடி வரை நீர் வரத்து அதிகரித்தது. அருவிகள் பயங்கரமாக நீர் கொட்டியது.
கபினியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் இன்று இரவு மேட்டூர் அணையை அடையும். மேட்டூர் அணைக்கு தற்போது நொடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 83 அடியாகவும், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது.