ஏப்ரல் 13 முதல் மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்

வியாழன், 12 ஏப்ரல் 2012 (21:07 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் ஏப்ரல் 13 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் ஏப்ரல் 8 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். அதேபோல், ஏப்ரல் 8 ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், சங்கரன்கோயில், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி உள்ளிட்ட ஓரிரு இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தொண்டியை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் ஏப்ரல் 13 முதல் 17ஆம் தேதி வரை திருச்சி, காவிரி டெல்டா மாவட்டங்கள், நெல்லை, தேனி, நீலகிரி, கடலூர், புதுச்சேரி, சென்னை, சேலம், அரியலூர், பெரம்பலூர் உட்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்