உணவுப் பொருள் மானியம் ரூ.25,000 கோடி உயர்வு

புதன், 5 ஜனவரி 2011 (16:01 IST)
பொது விநியோக முறையின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கும், விவசாய விளை பொருட்களுக்கும் மத்திய அரசு அளித்துவரும் மானியம் இந்த ஆண்டு ரூ.25,000 கோடி உயர்ந்து ரூ.80,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் உணவுப் பொருட்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.55,578 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உணவுப்பொருள் தட்டுப்பாட்டை தடுக்க, இருப்பில் இருந்து கூடுதலாக உணவுப் பொருட்களை சந்தைக்கு கொண்டு சென்றதால், உணவுப் பொருட்களுக்கான மானியம் மட்டுமின்றி, வரிகள், போக்குவரத்து, சேமிப்பு என்ற பல வகைகளில் செலவு அதிகரித்துள்ளது என்று மத்திய உணவு அமைச்சக அதிகாரி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்