கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் மே 3 முதல் 5ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன். மே 5 வரை தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாகையை மையமாக கொண்டு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மே 8ஆம் தேதி மாலை முதல் 10ஆம் தேதி வரை தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், பெரம்பலூர், அரியலூர் விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட இதர பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கேராளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை மற்றும் நிலநடுக்க தேதி கணிப்பின்படி மே 9ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.