இந்தியாவின் வேளாண் உற்பத்தி 5.4% ஆக உயரும்

வியாழன், 24 மார்ச் 2011 (18:58 IST)
தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை போதுமான அளவு பொழிந்ததும், வேளாண் சாகுபடிப் பரப்பு உயர்ந்ததும் இந்த நிதியாண்டில் வேளாண் உற்பத்தி வளர்ச்சியை 5.4 விழுக்காடாக உயர்த்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“கடந்த ஆண்டு வேளாண் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் உற்பத்தி 5.4 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது” என்று மத்திய வேளாண் அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வேளாண் உற்பத்தி 3.8 விழுக்காடு ஆக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்