உலக கொரோனா பாதிப்பு 1.68 கோடியாக உயர்வு: அமெரிக்காவில் நிலவரம் படுமோசம்

புதன், 29 ஜூலை 2020 (07:50 IST)
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.68 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து 1.04 கோடி பேர் குணமடைந்தனர் என்பதும், அமெரிக்காவில் ஒரே நாளில் 64,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலகிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44.98 லட்சமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 1237 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் அமெரிக்காவில் கொரோனாவிற்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1.52 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,484,649 லட்சத்தை கடந்தது என்பதும் அந்நாட்டில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 88,634 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலக கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,532,135 என்றும் பலியானோர் மொத்த எண்ணிக்கை 34,224 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்