கொரொனாவிலிருந்து மீளாத அமெரிக்காவை நொறுக்கிய ஹன்னா! – புயலின் கோர தாண்டவம்!

திங்கள், 27 ஜூலை 2020 (08:38 IST)
கொரோனா பாதிப்பில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் வீசிய பெரும்புயல் டெக்ஸாஸ் மாகாணத்தையே சூறையாடியுள்ளது.

உலகம் முழுவதூம் உள்ள கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 43 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.50 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரொனாவிலிருந்தே மீளாத அமெரிக்காவை தன் பங்குக்கு சகட்டுமேனிக்கு தாக்கியுள்ளது ஹன்னா புயல்.

அட்லாண்டிக் கடலில் மையம் கொண்ட ஹன்னா புயல் நேற்று இரவில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கரையை கடந்தது. இதனால் வீசிய சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்துள்ளன. வீடுகளின் கூரைகளை காற்று பெயர்த்து வீசியுள்ளது. பயங்கரமான மழையால் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

டெக்ஸாஸில் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் தற்போது மீட்பு பணிகளை மேற்கொள்வதிலும் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாதிப்பால் ஏற்பட்ட உயிர்சேதங்கள், பொருட்சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னமும் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்