அமெரிக்காவில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.5 ஆக பதிவு - சுனாமி எச்சரிக்கை

திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (12:31 IST)
அமெரிக்காவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை 6.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பயத்தில் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். 
 
நிலநடுக்கம் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், குறித்து தகவல் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்