மாமனார், மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை: சிக்கிய டிரம்ப்!

வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (16:04 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது மாமனார் மற்றும் மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமையை பெற்றுதந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
டிரம்பின் மனைவி மெலானியாவின் பெற்றோர் விக்டர் - அமலிஜா. இவர்கள் சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர்கள். 70 வயதுக்கு மேற்பட்ட இவர்கள் தற்போது செவ்னிகா நகரில் தங்கியிருந்தனர். 
 
விக்டர் கார் விற்பனையாளராகவும், அமலிஜா ஜவுளி தொழிற்சாலையிலும் பணிபுரிந்தனர். இந்நிலையில் இவர்கள் அமெரிக்க குடிமக்கள் ஆகிவிட்டதாக நியூயார்க்கில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 
 
ஆனால், சட்ட நடவடிக்கைகள் படி அமெரிக்க குடியுரிமை பெற அதற்கு விண்ணப்பிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே கிரீன் கார்டு பெற வேண்டும். ஆனால் மெலானியாவின் பெற்றோர் சமீபத்தில்தான் கிரீன் கார்டு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே, டிரம்ப்தான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இவர்களுக்கு குடியிரிமை வாங்கிக்கொடுத்திருக்க கூடும் என இவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 
 
அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கான குடியுரிமை கொள்கையை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலை இவரது இந்த செயலால் சிக்கலில் சிக்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்