கோமாவுக்கு போன கொரிய அதிபர்; ஆட்சியில் சகோதரி! – என்ன நடக்கிறது வட கொரியாவில்?

திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (13:15 IST)
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன அழுத்தத்தில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீப காலமாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றும், அவர் மன உளைச்சலால் பதவியை அவரது சகோதரியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய முன்னாள் தென்கொரிய ஜனாதிபதியின் ஆலோசகர் சாங் சோங் மின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மன உளைச்சலில் இருந்து கோமா நிலைக்கு போய்விட்டதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளாரா என்பது குறித்து எதுவும் தெரிய வரவில்லை. தற்போது தற்காலிகமாக அவரது சகோதரி கிம் ஜாங் உன்னின் பணிகளை கவனித்து வருவதாக தெரிகிறது என பேசியுள்ளார்.

தென்கொரிய ஊடகங்களும் கிம் ஜாங் உன் கவலைக்கிடமாக இருப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியிட்டும், விழாக்களில் அவர் கலந்து கொண்டதாக வெளியாகும் புகைப்படங்கள் பொய்யென்றும் கூறி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்