உங்க ஊரடங்குக்கு கொரோனாவே தேவலாம்! – கொதித்தெழுந்த இஸ்ரேல் மக்கள்!

திங்கள், 5 அக்டோபர் 2020 (08:35 IST)
இஸ்ரேலில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது போல இஸ்ரேலிலும் மார்ச் மாதத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு கடந்த மே மாதம் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சரியாக செயல்படவில்லை என புகார் தெரிவித்து மக்கள் பலர் வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இஸ்ரேலில் மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாக கடந்த மாதம் 18ம் தேதி முதலாக மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்கள் போராட்டத்தை முடக்கவே இரண்டாவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

டேவ் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் பலர் கூடி போராடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பொது இடங்களில் போரட்டம் நடத்துவதை தடுக்க போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தற்போது மோதல்கள் எழ தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்