ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை: நீதி கேட்டு கனிமொழி பேரணி

ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (13:22 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
திமுக, காங்கிரஸ் உள்பட பல அரசியல் கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பு எடுத்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன 
 
மேலும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஹத்ராஸ் நோக்கி செய்த பயணமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் திமுகவும் கடந்த சில நாட்களாக இந்த சம்பவத்திற்கு திமுக கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நாளை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது 
 
ஹத்ராஸ் பாலியல் வன் கொடுமைக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை நோக்கி திமுக நடத்தும் பேரணி நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் கையில் ஒளி ஏந்தி ஆளுநர் மாளிகைக்கு திமுக எம்பி கனிமொழி தலைமையில் பேரணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்