கொரோனா தடவப்பட்ட கடிதங்கள் – உலக தலைவர்களுக்கு இண்டர் போல் எச்சரிக்கை!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (18:44 IST)
உலகத் தலைவர்களுக்கு கொரோனா தடவப்பட்ட கடிதங்கள் அனுப்பப்படலாம் என இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சில மருந்துகள் ஆரம்ப கட்டங்களை தாண்டி இப்போது மனித பரிசோதனை கட்டத்தை எட்டியுள்ளன. இதுபோன்ற தகவல்கள் மக்களுக்கு ஆறுதல்களை அளித்தாலும் அவ்வப்போது சில அதிர்ச்சி தகவல்களும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் பன்னாட்டு காவல் அமைப்பான இண்டர்போல் உலகத்தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் கொரோனா தடவப்பட்ட கடிதங்களில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளதாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்