குடுக்குற தெய்வம் கூரையை பிச்சிகிட்டுதான் கொடுக்கும் – உண்மையான பழமொழி!

வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:09 IST)
இந்தோனேசியாவில் ஒருவர் வீட்டில் விண்கல் விழுந்த நிலையில் அதை விற்று கோடிஸ்ரர் ஆகியுள்ளார்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஜோசுவா ஹூடகலுங் என்ற நபர் சவப்பெட்டி செய்து விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால் ஒரே நாளில் அவரின் வாழ்க்கையே மாறிப்போயுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அவர் வீட்டில் ஒரு கல் கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்துள்ளது. அதனால் பதறிப்போன அவர் அந்த கல்லை நோண்டி எடுத்துப்பார்த்துள்ளார். அப்போதுதான் அது ஒரு விண்கல் என்று தெரிந்துள்ளது.

சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் வயதான அந்த கல்லை அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் அவரிடம் இருந்து 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த பணத்தால் ஹுடகலுங்கின் வாழ்க்கையே மாறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்