முன்னாள் அதிபர் டிரம்பின் மருமகன் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை !

திங்கள், 1 பிப்ரவரி 2021 (20:51 IST)
சமீபத்தில் உலக வல்லரசான அமெரிக்காவில் அதிபராக ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் ஃபுளோரிடாவிலுள்ள தனது மாளிகைக்குச் சென்றார் முன்னாள் அதிபர் டிரம்ப்.

டிரம்பின் ஆட்சியில் சீனாவுடனான வர்த்தகப் போர்,  ஈரானின் ராணுவத் தளபதி சுலைமானைக் கொன்றது,  ஜார்ஜ் ஒயிட் என்ற கறுப்பினத்தவர் படுகொலையால் நிகழ்ந்த இனக்கலவரம், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி அவர் அதிபர் தேர்தலில் தான் தோற்றதை ஒப்புக்கொள்ளவே ஒருமாதம் ஆனது.

இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்பின் மருமகனும் வெள்ள்ஐ மாளிகையின் மூத்த ஆலோசகராக இருந்த ஜாரெட் குஷ்னெரின் பெயர் அமைதியாக்கான நோபர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவை  சீரமைத்ததற்காக அவருக்கு இந்த அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டுமென அமெரிக்க அட்டர்னி ஆலன் டெர்ஷிவிடேஸ் தெரிவித்துள்ளார்.

கடந்தவருடம் டிரம்பின் பெயரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்