எகிப்து புரட்சிக்கு காரணமான அதிபர் முபாரக் காலமானார்!

புதன், 26 பிப்ரவரி 2020 (09:01 IST)
எகிப்து நாட்டில் ஏற்பட்ட புரட்சிக்கு காரணமான முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக் உடல்நலக் குறைவால் காலமானார்.

கடந்த 1981 முதல் 2011 வரை 30 ஆண்டுகளாக எகிப்தின் அதிபராக பதவி வகித்தவர் ஹோசினி முபாரக். இவரது ஆட்சியில் எகிப்தில் ஏற்பட்ட பஞ்சம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைகளால் பொங்கியெழுந்த மக்கள் போராட்டம் செய்ய தொடங்கினர். 2011ல் எழுச்சியடைந்த இந்த போராட்டம் எகிப்து புரட்சி என அழைக்கப்படுகிறது.

இந்த புரட்சி போராட்டத்தில் 846 மக்கள் கொல்லப்பட்டனர். 6 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இறுதியாக தனது பதவியை துறந்த முபாரக் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவரது குற்றங்களுக்கான போதிய ஆதாரம் இல்லை என 2017ல் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக தனது 91வது வயதில் இன்று காலமானார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்