பலவீனமடையும் பூமியின் காந்தபுலம்! – செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு!

வெள்ளி, 22 மே 2020 (13:48 IST)
பூமியின் காந்தபுலமானது நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதால் செயற்கைகோள்கள் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை சுற்றி உள்ள காந்தபுலம் சூரியனிலிருந்து வரும் பல கதிர்வீச்சுகளை பூமிக்குள் ஊடுறுவ விடாமல் தடுத்து வருகிறது. பூமி பல காலமாக உயிர்கள் வாழ தகுதியான கிரகமாக இருப்பதற்கு முக்கியமான காரணிகளில் காந்தபுலங்களும் ஒன்றாகும். இந்நிலையில் பூமியின் காந்தபுலம் நாளுக்குநாள் பலவீனமடைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூமி தனது காந்தபுலத்தில் 10 சதவீதத்தை இழந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் பூமியில் சீதோஷ்ண நிலைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், காந்தபுல குறைபாடு செயற்கைக்கோள்களை பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காந்தபுலம் பலவீனமடைவதால் அதன் எல்லைகள் குறுகும். அப்போது காந்த புலத்தின் எல்லைக்குளுக்கு அப்பால் உள்ள செயற்கை கோள்களை விண்வெளியில் உள்ள மின்னேற்றம் பெற்ற துகள்கள் தாக்கலாம் என்றும், இதனால் செயற்கை கோள்கள் தொழில்நுட்ப ரீதியாக பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்