ட்ரம்ப்பின் மூத்த மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

சனி, 21 நவம்பர் 2020 (10:17 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகமெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அமெரிக்காவில் உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்காதான் உலகளவில் கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உள்ள நாடாகும். அந்த நாட்டின் அதிபர் ட்ர்மப்புக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பின்னர் சிகிச்சையில் அவர் நலமானார். இந்நிலையில் இப்போது அவரின் மூத்த மகன் டொண்டால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் வழிகாட்டுதலோடு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்