உலக நிலவரம்: 5.75 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

சனி, 21 நவம்பர் 2020 (08:10 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் பல கடும் முயற்சி எடுத்து வருகின்றினர். ஆனால் இதன் இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
ஆம், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.75 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே சபயம் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 
 
மேலும் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 16 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்