ஜெர்மனி கனடாவிலும் பரவியது கொரனா வைரஸ்..

Arun Prasath

செவ்வாய், 28 ஜனவரி 2020 (15:20 IST)
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், தைவான், தாய்லாந்து, தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளிலும் கொரனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரனா வைரஸால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அமெரிக்கா, தைவான், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் கொரனா வைரஸ் பரவி வருகிறது.

இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் பவேரியா மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரனா அறிகுறி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கனடா நாட்டில் கடந்த 22 ஆம் தேதி சீனாவில் இருந்து ஒண்டேரியாவிற்கு வந்த ஒரு தம்பதியரில் கணவருக்கு கொரனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது மனைவி தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதே மலேசியாவிலும் பரவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரனா வைரஸ் பரவாமல் இருக்க உலக நாடுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் ஜெர்மனி, கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்