ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Siva

ஞாயிறு, 19 மே 2024 (13:46 IST)
ராமர் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவைத் தேர்தல் என்று உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் மோடி அரசு மீண்டும் 400 இடங்களை தாண்ட முடியும் என்றும் ராமரை கொண்டு வந்தவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவோம் என்ற குரல் மக்களிடம் இருந்து வருகிறது என்றும் இந்த தேர்தல் ராமர் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் என்றும் தெரிவித்தார்.

அராஜகம் மற்றும் ஊழல் நிறைந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கலவரங்கள் தான் இருந்தது என்றும் பாஜக ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளில் உபியில் எந்தவிதமான கலவரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

பாஜக அரசால் பெண்களும் தொழிலதிபர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் பயங்கரவாத உணர்வுகளை புரிந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்