பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அர்னால்ட்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வியாழன், 18 ஜூலை 2019 (15:26 IST)
உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாஃப் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளியிருக்கிறார் அர்னால்ட்.

உலகின் சிறந்த பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் ப்ளூம்பெர்க் இணையதளம் வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த 100 பணக்காரர்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். இந்த வருடமும் 124 பில்லியன் சொத்துக்களுடன் முதலிடம் வகிக்கிறார் ஜெஃப் பெசோஸ். இரண்டாவது இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார் பிரான்ஸ் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட்.

பில்கேட்சின் சொத்து மதிப்பு 107 பில்லியன். அர்னால்டின் சொத்து மதிப்பு 108 பில்லியன். வெறும் 1 பில்லியன் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார் அர்னால்ட். இவ்வளவுக்கும் பெனார்ட் அர்னால்ட் பெரிய ஆன்லைன் மார்க்கெட் நிறுவனரோ, தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்துபவரோ இல்லை. தோல் பை, வார்கள், அழகுபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் எல்.வி.எம்.ஹெச் என்ற நிறுவனத்தின் முதலாளிதான் இந்த பெர்னார்ட் அர்னால்ட்.

1987ல் அவர் தொடங்கிய இந்த நிறுவனத்தின் போன வருட மதிப்பு வெறும் 70 பில்லியன்தான். ஆனால் ஒரு வருடத்துக்குள் 108 பில்லியனாக அதை உயர்த்தி இவர் நிகழ்த்திய இந்த சாதனையை உலக பணக்காரர்கள் வியப்பாக பார்க்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்