முரட்டு ”சிங்கிள்”களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட விமானமாக இருக்குமோ??... ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் அறிமுகம்

வியாழன், 18 ஜூலை 2019 (11:18 IST)
அமெரிக்காவில் “லிப்ட்” என்ற நிறுவனம், ஒரு நபர் மட்டுமே பயணிக்ககூடிய விமானத்தை தயாரித்துள்ளது.

ஒற்றை என்ஜின் கொண்ட “ஹெக்சா” என பெயரிடப்பட்டுள்ள விமானத்தை, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் “லிப்ட்” என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விமானம் ஒற்றை நபர் மட்டுமே பயணிக்ககூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 196 கிலோ எடையை கொண்டுள்ள இந்த விமானம், தண்ணீரில் மிதக்கும் வகையிலும், அவசர காலத்தில் உயிர் பிழைக்க பாராசூட் உதவியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்திற்கு உள்நாட்டு விமான ஒழுங்காற்று அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. ஆதலால் அடுத்த ஆண்டுக்குள் இந்த விமானத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயன்று வருகிறது.

மேலும் மின்சாரம் மூலம் இயங்கும் இந்த விமானத்தை இயக்குவதற்கு, விமானிக்கான ஓட்டுநர் உரிமம் பெற அவசியம் இல்லை எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்