போலீஸ் பலமுறை கதவைத் தட்டியது: முருகதாஸ்

வெள்ளி, 9 நவம்பர் 2018 (11:43 IST)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலில் பெரிய சாதனை  படைத்துள்ளது.
சர்கார் படத்தில் வில்லியாக நடிக்கும் வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் கோமளவல்லி எனும் பெயர், இலவசப் பொருட்களை எரிப்பது போன்றகாரணங்களால்  அதிமுகவினரிடையே சர்கார் படம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், உள்பட அதிமுக அமைச்சர்கள் பலர் சர்கார் படத்தின் சர்ச்சைக்கு உரிய காட்சிகளை நீக்கிவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எசி விடுத்தனர்.
 
இந்த நிலையில், நேற்று காலையில் இருந்தே அதிமுகவினர் சர்கார் படம் ஓடுகிற தியேட்டர்களில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேனர்களைக் கிழித்து கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. நிறைய தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்கு உரிய காட்சிகள் நீக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 9ம் தேதி மதியக் காட்சியில் இருந்து  திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், நேற்று  சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் முருகதாஸ் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காகவே அவர் வீட்டின் முன்பு போலீஸ்  குவிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, இயக்குநர் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், போலீசார் வந்து பலமுறை கதவைத் தட்டிக்கொண்டே இருந்தனர் என்று பதிவிட்டார். மேலும் தற்போது நான் வீட்டிலேயே இல்லை என்றும் முருகதாஸ் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்