முன்னாள் அமைச்சர் திடீர் தலைமறைவு? போலீஸ் தேடுதல் வேட்டை

வியாழன், 8 நவம்பர் 2018 (09:41 IST)
முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி திடீரென தலைமறைவானதாக கூறப்படுவதால் அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் ஜனார்த்தன ரெட்டியை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

கர்நாடக மாநிலம், பெல்லாரி பகுதியில் பெரும் செல்வாக்குடன் இருந்த ரெட்டி சகோதரர்களில் ஒருவர் ஜனார்த்தன ரெட்டி. முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசில் அமைச்சராக பதவி வகித்தவர். ஆனால் அதே எடியூரப்பா அரசின்போது இவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கியது மட்டுமின்றி ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனார்த்தன் ரெட்டி மீது ஒருசில வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் தேடப்பட்டு வருவதாகவும், அவர் தலைமறைவாகி செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்