மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா?

சனி, 30 ஜனவரி 2021 (08:11 IST)
சிம்பு மற்றும் கௌதம் மேனன் இணையும் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

லாக்டவுன் சமயத்தில் நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து தனது நிறுவனத்தில் மேலும் இரண்டு படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தார் ஐசரி கணேஷ்.

இந்நிலையில் ஐசரி கணேஷ் சிம்புவை வைத்து வரிசையாக 2 படங்கள் தயாரிக்க உள்ளதாகவும், அந்த இரண்டு படங்களையும் கௌதம் மேனன் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த படங்களில் ஏதாவது ஒன்றில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்