சூரரைப் போற்று ரிலிஸ் சிக்கல்…. சூர்யாவுக்காக களத்தில் இறங்கிய நக்மா!

வியாழன், 22 அக்டோபர் 2020 (16:38 IST)
சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தடையில்லா சான்றிதழ் வாங்க நக்மா களத்தில் இறங்கியுள்ளாராம்.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூர்யா கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் பாத்திரத்தில்தான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சில காட்சிகளுக்காக விமானப்படையிடம் இருந்து ஒப்புதல் சான்றிதழ் ஒன்று வந்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியுமாம். அதனால் இப்போது அந்த என் ஓ சிக்காக படக்குழு அவசர அவசரமாக பணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அந்த சான்றிதழ் கிடைக்காத பட்சத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக சூர்யாவுக்காக அந்த சான்றிதழை வாங்க சூர்யாவுக்காக களத்தில் இறங்கியுள்ளாராம் அவரின் மனைவியின் அக்காவான நக்மா. சூர்யா சமீபகாலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தான் நேராக இது சம்மந்தமாக இறங்க முடியாது என்பதால் அரசியல் வாதியான நக்மாவின் உதவியை நாடியுள்ளாராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்