ஏன் இத்தனை நாட்கள் நடிக்கவில்லை? அப்பாஸ் விளக்கம்

வெள்ளி, 22 ஜனவரி 2021 (01:04 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர்ர் அப்பாஸ். இவர் சமீபகாலத்தில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை இந்நிலையில் இவர் ஏன் நடிகவில்லை என்று கூறியுள்ளார்.

காதல் தேசம்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், காதல்பூவே உள்ளிட்ட ரொமாண்டிக் படங்களில் ஹீரோவாக நடித்தவர் அப்பாஸ். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.குறிப்பாக பெண் ரசிகைகள்.

இந்நிலையில், இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு திருட்டுப் பயலே படத்தில் நடித்தார். அதன்பின் அவர் நடிக்கவில்லை.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

என்னை வியக்கவைக்கும் அளவுக்கு எந்தக் கதையும் வரவில்லை; எனக்கு நாளுக்கு நாள் நடிப்பு போர் அடித்துவிட்டதால் சினிமாவை விட்டு விலகி குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுவருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்