விடிவி கணேஷுக்கும் இரு நடிகர்களுக்கு இடையே எழுந்த இடைவெளி!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:23 IST)
நடிகர் விடிவி கணேஷ் சந்தானம் மற்றும் சிம்பு ஆகிய இருவருடனும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார்.

இயக்குனர் கௌதம் மேனனோடு சேர்ந்து படங்களை தயாரித்து வந்த கணேஷ், விடிவி படத்தில் சிம்புவோடு நடித்த பின்னர் பிரபலமானார். அதன் பின்னர் வரிசையாக சிம்பு படங்களில் நடித்து அவருக்கு நெருக்கமாக பழகி வந்தார். இதன் மூலம் சிம்புவின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான சந்தானத்தோடு நெருங்கிய நண்பரானார்.

சந்தானத்தின் படத்தில் நடித்ததோடு அவரின் படம் ஒன்றையும் தயாரித்துள்ளார். அதில் அவருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதில் அவருக்கும் சந்தானத்துக்கும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதே போல சிம்புவோடும் அவருக்கு இப்போது ஒரு இடைவெளி எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது அவரை சினிமாக்களில் அதிகமாகப் பார்க்க முடியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்