கொரோனா பிரதிபலிப்பு: எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் - விஷ்ணு விஷால் ட்வீட்!

செவ்வாய், 31 மார்ச் 2020 (13:01 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் விவாகரத்து செய்துகொண்டனர்.

இதையடுத்து கேரியரில் அதீத கவனத்துடன் இருந்த வந்த விஷ்ணு விஷால்  பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலிக்க துவங்கினார். அவ்வப்போது இருவரும் சேர்ந்து இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை சாமுவலைத்தளங்களில் வெளியிட்டு வருவார். அந்தவகையில் சமீபத்தில் கூட ஜுவாலா கட்டா கொரோனா ஊரடங்கு உத்தரவின் சமூக விலகளால் தனது காதலர் விஷ்ணு விஷாலை பிரிந்திருப்பதாக  வருத்தமாக தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் 2020 ஆரம்பிக்கும்போதே நான் எப்படியிருந்தேன் இப்போ எப்படி ஆகிவிட்டேன் என கூறி FIR படத்தின் கட்டான உடலை பதிவிட்டுள்ளார்.

Good morning guys..
DAY 7..
just trying to start the day on a lighter note..#StayHomeStaySafe#PrayForTheWorld#FIRshootdiaries pic.twitter.com/UwW9bHvMFJ

— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) March 31, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்