’எங்க பாட்டன் சொத்து’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

வெள்ளி, 13 நவம்பர் 2020 (19:10 IST)
தமிழ் சினிமா ஹீரோக்களில் ஒருவரான விமல் நடித்த படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
ஈபிஎஸ் என்று அழைக்கப்பட்ட எங்க பாட்டன் சொத்து என்ற டைட்டிலில் விமல் நடித்த ஒரு திரைப்படம் உருவாகி வருவதாகவும் மக்கள் அரசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சற்குணம் இயக்கி வருகிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் எங்க பாட்டன் சொத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது
’எங்க பாட்டன் சொத்து’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்