பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஒரு பாடலுக்காக கங்கை அமரன்& இளையராஜா!

vinoth

புதன், 13 மார்ச் 2024 (08:13 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தில் ஒரு பாடலை விஜய்யே பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அந்த பாடல் பதிவு நடந்ததாக சொல்லப்படுகிறது.

படத்தில் இடம்பெறும் மற்றொரு பாடலை இளையராஜாவை பாட வைத்துள்ளாராம் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கங்கை அமரனும் இளையராஜாவும் ஒரு பாடலுக்காக இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்