இன்னும் ரெண்டு மாசத்தில் அடுத்த பட அறிவிப்பு… நெல்சன் லேட்டஸ்ட் அப்டேட்!

செவ்வாய், 12 மார்ச் 2024 (12:10 IST)
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் உடனடியாக ஜெயிலர் 2 உருவாகும் என தகவல்கள் பரவின.

ரஜினியும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது.  இப்போது ரஜினி வேட்டையன் மற்றும் லோகேஷ் இயக்கும் ரஜினி 171 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஜெயிலர் 2 தொடங்கும் என சொல்லப்பட்டது. அதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது நெல்சன் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “இன்னும் இரண்டு மாதத்தில் எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். அது ஜெயிலர் 2 தானா என்பது இன்னும் உறுதியாகவில்லை.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்