லோகேஷ் தயாரிப்பில் வெளியான ஃபைட் கிளப் … பிரபல ஓடிடியில் ரிலீஸ்!

vinoth

சனி, 27 ஜனவரி 2024 (07:22 IST)
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலமாக உறியடி விஜய்குமாரின் 'ஃபைட் கிளப்' என்ற படத்தைக் கடந்த வாரம் வெளியிட்டார். இந்த படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்க, அவருடன் இணைந்து லோகேஷ் வெளியிட்டார். இந்த படத்தை லோகேஷின் உதவியாளர் இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி கதை எழுத விஜய்குமார் வசனத்தை எழுதியிருந்தார்.

இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸானாலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனால் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. இந்நிலையில் இன்று இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்