இந்த வாரம் வெளியாக உள்ள ஃபைட் கிளப் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

செவ்வாய், 12 டிசம்பர் 2023 (13:50 IST)
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலமாக உறியடி விஜய்குமாரின் 'ஃபைட் கிளப்' என்ற படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கும் படம் இது. இந்த படத்தை லோகேஷின் உதவியாளர் இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி கதை எழுத விஜய்குமார் வசனத்தை எழுதியுள்ளார்.

இந்த படம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்போது சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.  படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 17 நிமிடம் ஓடும் என சொல்லப்படுகிறது. அதிகப்படியான வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்