மீண்டும் போஸ்டர் களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்: பரபரப்பு தகவல்

ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (19:05 IST)
மீண்டும் போஸ்டர் களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்:
தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் தான் அடுத்த முதல்வர் என்றும் கடந்த சில மாதங்களாக விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வந்தனர் என்பது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை விஜய் நேரடியாக சந்தித்து பேசி, அரசியலில் இறங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன 
 
அனேகமாக அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் விஜய்யின் அரசியல் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் திருச்சியில் இதுகுறித்த போஸ்டர் ஒன்றை நகர் முழுவதும் ஒட்டி உள்ளனர்
 
அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: ’1991 முதல் 2016 வரை சட்டமன்ற தேர்தலில் இருபெரும் தலைவர்களைக் கண்ட தமிழகம் தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே, நாளைய தமிழக முதல்வரே’ 
 
இந்த போஸ்டர் தற்போது திருச்சி முழுவதும் வைரலாகி வருகிறது என்பதும் விஜய்யின் அரசியல் போஸ்டர் என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்