நடிகர் விஜய் தனிக் கட்சி தொடங்குகிறாரா? பி.ஆர் ரியாஸ் கே அஹமத் டுவீட்

வியாழன், 5 நவம்பர் 2020 (18:02 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் அரசியலுக்கு வரவழைக்க அவரது ரசிகர்கள் அவ்வப்போதும் எதாவது போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அப்பது டுவிட்டரில் ஹேஸ்டேக் பதிவிட்டு டிரெண்டிங் செய்வது வாடிக்கையான ஒன்றாகும்.

இந்நிலையில் சமீபத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  நானே ஒரு அமைப்பில் இருக்கும் நான் எதற்கு பாஜகவில் இணையவேண்டும் ? என்ற கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் விஜய் கட்சி தொடங்குவதாக தகவல்கள் பரவியது. இன்று விஜய், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்க வேண்டி கட்சிப் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகத் தகவல் அனைத்து மீடியாக்களிலும் வெளியானது.

இந்நிலையில்  பிஆர் ரியாஸ் கே அஹமத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய் * கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது The news spreading about " #ThalapathyVijay political party registered today " is untrue என்று விளக்கமளித்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. #விஜய் #vijay #master #sac #vijaymakkaliyyakm #political

#BREAKING: அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்

* கட்சியின் பெயரை, தலைமை தேர்தல்
ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது
The news spreading about " #ThalapathyVijay political party registered today " is untrue pic.twitter.com/sLrxqBNmiz

— RIAZ K AHMED (@RIAZtheboss) November 5, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்