சூர்யாவின் கங்குவா டீசர் தயார்… ரிலீஸ் ஆகப்போவது எப்போது?

vinoth

செவ்வாய், 5 மார்ச் 2024 (07:03 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் படத்தில் தன்னுடையக் காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்தார் சூர்யா. இதையடுத்து வி எஃப் எக்ஸ் மற்றும் மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான நிலையில் தற்போது டீசர் ஒன்று தயாராகியுள்ளதாம். தேர்தல் முடிந்ததும் ஏப்ரல் இறுதியில் இந்த டீசர் வெளிவரலாம் என சொல்லப்படுகிறது. படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்