அடுத்த கட்டத்துக்கு சென்ற சூர்யாவின் கங்குவா திரைப்படம்… படக்குழு வெளியிட்ட அப்டேட்!

vinoth

வியாழன், 22 பிப்ரவரி 2024 (07:31 IST)
சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேல் நடந்த இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது.

படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் கங்குவா படத்தின் வி எஃப் எக்ஸ் பணிகள் முடிய நேரமாகும் என்பதாலும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. சூர்யா தனது காட்சிகளுக்கான டப்பிங்கை பேச தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கங்குவா திரைப்படம் இந்தியாவில் 10கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்