இனி புதுப் படங்களே வாங்கப்போவதில்லை…. சன் டி வியின் முடிவுக்குக் காரணம் என்ன?

சனி, 29 ஆகஸ்ட் 2020 (15:31 IST)
தமிழ் தொலைக்காட்சி உலகின் முன்னணி நிறுவனமான சன் தொலைக்காட்சி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு புதிய படங்களே வாங்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாம்.

ஒரு காலத்தில் சினிமாவுக்கு எதிரியாக அமையும் என சொல்லப்பட்ட தொலைக்காட்சிகள் இப்போது சினிமாக்காரர்களுக்கு கணிசமான வருவாய் கிடைக்க வழிவகை செய்து வருகின்றன. தமிழ் சினிமாவில் படங்களுக்கு பட்ஜெட் போடப்படும்போதே சேட்டிலைட் வருவாயைக் கணக்கில் கொண்டே பணம் ஒதுக்கப்படுகிறது.

அப்படி தமிழ் படங்களை நல்ல தொகைக் கொடுத்து வாங்குவதில் முன்னணியில் இருப்பது சன் தொலைக்காட்சி. ஆனால் அவர்கள் இப்போது இன்னும் கொஞ்சம் காலத்துக்கு எந்த புதிய படத்தையும் வாங்கப்போவதில்லை என அறிவித்துள்ளனராம். ஏனென்றால் ஏற்கனவே 36 படங்களுக்கு 150 கோடி ரூபாய்க்கு மேல் முன்பணம் கொடுத்துள்ளனராம். ஆனால் அந்த படங்கள் அவர்கள் கைக்கு கிடைத்தபாடில்லையாம். அதனால் அதிக தொகையை முதலீடு செய்ய விரும்பவில்லையாம் சன் தொலைக்காட்சி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்