எனக்கு கொடுத்தது கதர் ஆடையே இல்லை… கமலைக் கடுமையாக விமர்சித்த சுசித்ரா!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (11:02 IST)
நடிகர் கமல்ஹாசனை பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சுசித்ரா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று குறைந்த வாக்குகள் அடிப்படையில் சுசித்ரா வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறி பின்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பாடா ஜெயிலில் இருந்து தப்பித்து விட்டேன் என்று கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டை ஒரு ஜெயில் என்று கூறிய அவரது இந்த இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் கமல் கடைசி நாள் போட்டியாளர்களை கதர் அணியச் சொன்ன நிகழ்வு குறித்து பேசியுள்ள சுசித்ரா அவரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில் ‘எனக்கு சிந்தடிக் ஆடைகளைக் கொடுத்துவிட்டு அதைக் கதர் என்பது போல காட்டினார்கள். ’ என சொல்லி கமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்