சசிகலாவை அடுத்து இளவரசிக்குக் கொரோனா பரிசோதனை!

வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:52 IST)
சசிகலாவுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் விடுதலை இந்த மாதம் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடுமையான நிமோனியா காய்ச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று இளவரசிக்கு பெங்களூர் சிறையில் கொரோனா பரிசோதனை செயப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்