பிரபல நடிகரின் மகன் திமுகவில் ஐக்கியம்!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (15:43 IST)
பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் மகன் ராஜேந்திரகுமார் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

பழம்பெரும் நடிகரான எஸ் எஸ் ஆர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். ஆரம்ப காலங்களில் திமுகவுக்காக தேர்தல்களிலும் நின்று வெற்றி பெற்றார். ஆனால் எம்ஜி ஆர் கட்சி ஆரம்பித்ததும் அதிமுகவில் ஐக்கியமானார். அதிலிருந்து அவர் மறையும் வரை அந்த கட்சியிலேயே இருந்தார். ஆனால் கடைசிகாலத்தில் அவருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது அவரின் மகன்களில் ஒருவரான ராஜேந்திரகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார். இந்த சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, அ.ராசா, செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆகியோர் உடன் இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்