40000 கூட இல்லன்னா எதுக்கும் டாக்டர்க்கு படிக்கணும் – சர்ச்சையான துரைமுருகனின் பேச்சு!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:22 IST)
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியது சர்ச்சைக் கிளப்பியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவ கல்லூரியில் 227 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இடங்கள் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. ஆனால் தனியார் கல்லூரிகளில் ஏழை மாணவர்களால் எப்படி கல்வி கட்டணம் செலுத்தி பயில முடியும் என கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு விடை தரும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டதாவது. 

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் அரசுக் கல்லூரியில் படிக்கும் நலிந்த மாணவர்களின் படிப்பு செலவுக்கு திமுக உதவுமா என்ற கேள்விக்கு ‘வருஷத்துக்கு 40,000 ரூபாய் கூட கட்டமுடியாதன் எதுக்கு டாக்டர்க்கு படிக்கணும்’ எனக் கேட்டார். இது ஏழை மாணவர்களை அவமதிக்கும் விதமாக உள்ளது எனக் கூறி சமூகவலைதளங்களில் துரைமுருகனுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்