நாலு பேருக்கு நல்லது பண்ணா பொறுக்காதே! – சோனு சூட் பெயரில் ஃபேக் ஐடிக்கள்!

சனி, 22 ஆகஸ்ட் 2020 (09:43 IST)
சமீப காலமாக மக்களிடையே ட்ரெண்டாகியுள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட் பெயரில் சிலர் போலி கணக்கு வைத்து மோசடி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீப காலமாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் புலம்பெயர் தொழிலாளிகள், விவசாய மக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருவதால் மக்களிடையே பிரபலமாகி உள்ளார். தொடர்ந்து மக்களிடமிருந்து உதவி கோரிக்கைகள் அதிகமாகி வரும் நிலையில் அவர் பெயரில் போலி ஐடிக்கள் சிலவும் உலா வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ஃபேக் ஐடியை மென்சன் செய்து பதிவிட்டுள்ள அவர் “அப்பாவி மக்களை ஏமாற்றியதற்காக விரைவில் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். அதற்கு முன்னதாக உங்கள் மோசடி வணிகத்தை நிறுத்தி விடுங்கள்” என எச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்