அமேசான் பிரைமில் ரிலீஸாகும் நானியின் புதிய படம்

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (20:13 IST)
140 நாட்களுக்கு மேலான கொரொனா ஊரடங்கு உள்ளது. சில தளர்வுகள் இருந்தாலும் சினிமாப் படப்பிடிப்புகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில நடிகர்கள் தங்களின் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள வி என்ற படம் செப்டம்பர் 5 ஆம் நால் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இப்படம் நானியின் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்