கங்குவா படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கும் சிறுத்தை சிவா!

vinoth

திங்கள், 25 மார்ச் 2024 (07:59 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது வி எஃப் எக்ஸ் மற்றும் மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளில் எந்த குறையும் வந்துவிடக் கூடாது என படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தை முடித்ததும் சிறுத்தை சிவா அடுத்து பாலிவுட்டில் முன்னணி நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் அல்லது வருண் தவான் கதாநாயகனாக நடிக்கலாம் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்