சாராயம் விற்பது அரசின் வேலையல்ல – நடிகர் கமல்ஹாசன்

செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (15:57 IST)
நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில்  ஏரல் காவலுதவி ஆய்வாளர் பாலு (56)என்பவரை சிலர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி  பாலு அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையாக ரூ.50 லட்சம் மற்றும் அரசு வேலை கொடுப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், பட்டப்பகலில். குடித்துவிட்டுப் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால் காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துனபம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

லட்சக்கணக்கான இளைஞர்களை குடிநோயாளிகளாக மாற்றியிருக்கிறது அரசு. சாராயம் விற்பது அரசின் கடமையல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் அதன் விற்பனையும் கண்காணிக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளதோ அங்கெல்லாம் உடனடியாக மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்  கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்